தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் பணி 1475 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி) பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலையிழந்த பணியாளர்களும், முன்னாள் இராணுவ வீரர்களும், பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி (ஐடிஐ) பெற்று முந்தைய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் முடித்தவர்கள் கீழ்வரும் பணியிடங்களுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு எண்.01/2016 தேதி: 28.02.2016
பணி: தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரவியல்
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: உதவி வரைவாளர்
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2200
தகுதி: கைவினைஞர் சான்று வரைவாளர் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பணி: கள உதவியாளர் (பயிற்சி)
காலியிடங்கள்: 900
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: மின்னியல், கம்பியாளர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினரும் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு - 250

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி:02.03.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:16.03.2016
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:18.03.2016
தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்:03.04.2016 அன்று காலை 10 மணி 12 மணி வரை (இரண்டு மணி நேரம்) மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.directrecuitment.i n

Comments

Popular posts from this blog