முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு: 2016-17ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. அந்தவகையில் 2016-17ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பெறுகின்றன.

விண்ணப்பங்களை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது நிறுவன வலைத்தளத்தில் ( www.ulakaththamizh.org) பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.

கட்டண விவரம் பின்வருமாறு : விண்ணப்பக் கட்டணம் (நுழைவுத் தேர்வு கட்டணம் சேர்ச்த்து) - ரூ. 300/- (எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு சாதிச்சான்று வழங்கும் நிலையில் ரூ. 200)

தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு கல்விக் கட்டணம் - ரூ. 4,500/-

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.08.2016

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் - 18.08.2016

வகுப்பு தொடங்கப்பெறும் நாள் - 24.08.2016

மேலும் விவரங்களுக்கு இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி அஞ்சல்
சென்னை - 600 113,

பேசி : 044-22542992 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog