பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முன்னாள் தலைவர் எம்.ஏ.சித்திகி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சார்பில், இரண்டு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் கண்டிப்பாக அமைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அமைக்க வேண்டும்

* பி.எட்., படிப்புக்கு தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, உதவித்தொகை வழங்க வேண்டும்

* எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டில் இருந்து, ஓராண்டாக மாற்றப்படும். தொலைநிலை கல்வியில், எம்.எட்., படிக்க அனுமதிக்க வேண்டும்

* தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்களின் செயல்பாடுகளை, குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்

* கல்வியியல் படிப்பில் திருத்தங்கள் கொண்டு வர, ஆசிரியர் கல்வியியல் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog