தமிழக பட்ஜெட் தாக்கல் எப்போது?- ஓரிரு நாளில்அறிவிப்பு வெளியாகிறது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்ததால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக 6 -வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்.

இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 16-ம்தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடந்தது. இறுதி நாளில் முதல்வர் ஜெயலலிதா பதிலுரை அளித்தார். அத்துடன் மறு தேதி குறிப்பிடப்படாமல் பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக சட்டப்பேரவை கூடும் தேதி ஓரிரு நாளில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு துறை வாரியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

Comments

Popular posts from this blog