பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி
பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை ஜூன் 27-இல் தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.இதுவரை ஓ.சி. பிரிவின் கீழ் 25,264 பேர், பி.சி. பிரிவின் கீழ் 12,218 பேர், பி.சி.எம். பிரிவின் கீழ்1,374 பேர், எம்.பி.சி. பிரிவினர் 8,163 பேர், எஸ்.சி.பிரிவினர் 3,848 பேர், எஸ்.சி.ஏ. பிரிவினர் 470 பேர்,எஸ்.டி. பிரிவினர் 91 பேர் என மொத்தம் 51,428 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.

கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,32,216 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,964 இடங்களும், அரசு - அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 62 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

Comments

Popular posts from this blog