சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், நகராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி ஆணையரிடமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடம், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கு 3 கி.மீ தொலைவில் இருத்தல் வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு:
பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 21 வயதுக்கு மேல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் தேர்ச்சி (அ) தோல்வி இருக்கலாம். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணிக்கு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் இருக்கலாம். 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.பொதுப் பிரிவில், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog