TNPSC:அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை.

அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப்-1முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது. மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை

தேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் முதன்மை தேர்வினை தள்ளிவைத்து 2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் 2015-16-ம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதில் இருந்து விலகுவார்கள்.

இதன் மூலம் முதன் முறையாக முதன்மை தேர்வு எழுதுவோர் பயன்பெறுவார்கள். இம்மாதம் 31-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி பணிகளுக்கான முதன்மை தேர்வு, ஆகஸ்டு 7-ந் தேதி நடைபெற உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்முதல் நிலை தேர்வு என அடுத்தடுத்து தேர்வுகள் உள்ளது.

தேர்வு தள்ளிவைக்க வேண்டும் இந்த தேர்வுகளை பெரும்பாலானோர் எழுத உள்ளதால் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தள்ளிவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இடையே உள்ளது. இதற்கிடையே குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கையுடன் கூடிய மனுவினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சமர்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog