குரூப்-4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை.

டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வுக்கு 10-ஆம்வகுப்பு படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர். நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்தால் 32 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினராக இருந்தால் 35 வயதுக்குள்ளும் இருந்தால் மட்டுமேவிண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்டுள்ளகோரிக்கையில், குரூப்-4 தேர்வுக்கான தகுதி 10 ஆம் வகுப்பு என்ற நிலையில் இத்தேர்வை ஏராளமானோர்எழுத விரும்புகின்றனர். 

ஆனால் வயது கட்டுப்பாட்டால் தேர்வெழுத முடியாத நிலை உள்ளது.எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் வயது வரம்பை 40 வரை உயர்த்தி ஆணையிட்டால் 10 ஆம் வகுப்பு முடித்து 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog