கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்குதடை

'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. '

இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார். அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படுத்தாமல்,தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

Comments

Popular posts from this blog