மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
T
புதுடெல்லி,
தமிழக மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணையை நவம்பர் 22–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மக்கள் நலப்பணியாளர்கள்
கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்டடு தீர்ப்பு அளித்தது.

அக்டோபர் மாதத்துக்குள் பணி வழங்காவிட்டால் ஊதியத்தை மட்டுமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது.
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதில் எந்த உபயோகமும் இல்லை. எனவே, சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இறுதி விசாரணை ஒத்திவைப்புஇந்தநிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மற்றும் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். எதிர் தரப்பில் மூத்த வக்கீல் சி.யு.சிங் ஆஜரானார்.

இரு தரப்பினரும் வழக்கு மீதான இறுதி விசாரணை விரிவான முறையில் தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் நேரம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் மாதம் 22–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Comments

Popular posts from this blog