TRB : ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்

விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டதாரி பெண்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.மதுரை தேர்வு மையம் ஒன்றில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த பட்டதாரி பெண், மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்து, வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பி உள்ளார். பின், பதில் வந்துள்ளதா என, பார்க்க முயன்ற போது, அறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணிடம் விசாரித்து, போலீசில் புகார்அளித்தனர்.ஆசிரியர் பதவிக்கான தேர்வைக்கூட, பள்ளி கல்வித்துறையால், பிரச்னையின்றி நடத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அலட்சியம்'

ஆசிரியர்களை நியமிக்கும், டி.ஆர்.பி.,யில், வெளிப்படை தன்மை இல்லை; நியமனங்களில் நேர்மையான விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை' என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், 'டி.ஆர்.பி., அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், வினாத்தாள் வெளியான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது' என, பட்டதாரிகளும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

Comments

Popular posts from this blog