வாட்ஸ்ஆப் சேவை; சிலருக்கு சிக்கல்?

சிம்பியான் ஆபரேட்டிங் சிஸ்டம் (ஓ.எஸ்) கொண்ட மொபைல் போன்கள் மற்றும் சில வகை போன்களில் வரும் டிசம்பர் 31க்கு மேல் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் சில வகை ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.


வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படும் போன் வகைகள்:
* சிம்பியான் பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள்
* பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
* நோக்கியா எஸ்40
* நோக்கியா எஸ்60
* ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 பயன்படுத்தப்படும் போன்கள்
* வின்டோஸ் போன் 7.1
* ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ் 6 பயன்படுத்தப்படும் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.
உற்பத்தி நிறுத்தம்:


நோக்கியா நிறுவனம் ஏற்கனவே சிம்பியான் கொண்ட மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், இன்னும் சிம்பியான் பயன்படுத்தப்பட்ட நோக்கியா ஈ6, நோக்கியா 5233, நோக்கியா சி5 03, நோக்கியா ஆசுா 306, நோக்கியா ஈ52 ஆகிய போன்கள் பயன்பாட்டில் உள்ளன. 
போனை மாற்றுங்க:


இது தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது இணைய பக்கத்தில்,இந்த வகை போன்கள், எங்களுக்கு முக்கியம். இருப்பினும், எங்களின் எதிர்கால சேவைக்கு இந்த வகை போன்களில் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இது கடினமான முடிவு என்றாலும், மக்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ள சரியான நடவடிக்கை தான். எனவே இந்த வகை போன் வைத்துள்ளவர்கள், வாட்ஸ் ஆப் சேவையை தொடர தங்களது போன்களை மாற்ற வேண்டும் அல்லது தரம் உயர்த்த வேண்டும் எனக்கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog