ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு



மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் இந்தத் தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படுகிறது.



2016 டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், ஜூலை மாதத் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால், ஜனவரி மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து ஜனவரி மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 23-ஆக நீட்டித்தது. ஜூலை மாத நெட் தேர்வு முடிவை திங்கள்கிழமை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog