ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய முறையைக் கையாள வேண்டும்-ஜி.கே.வாசன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய முறையைக் கையாள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தற்போது ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்ணை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணைச் சேர்த்தும் மதிப்பிடப்பட உள்ளது.இந்த முறையினால் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டப் படிப்புகளையும், ஆசிரியர் தகுதிக்கானப் படிப்புகளையும் முடித்துவிட்டு வேலையில்லாமல், பதிவு செய்து காத்திருப்போர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கும், தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண் பெறுபவர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்.எனவே, ஆசிரியர் நியமனத்தில் ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கும் வகையில் தற்போதுள்ள தகுதித் தேர்வு முறையில் உள்ள விதிகளை மாற்றி பயனுள்ள முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog