ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு

தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வில், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும், 
பணி நியமனம் இறுதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 
தொடர்ந்த வழக்கில், எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து, 
இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்வு முடிவுகள், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன. 
தற்போது, தேர்வு முடிவுகள் பற்றிய வதந்திகள் குறித்து, தேர்வுத் துறையிடம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேர்வு முடிவுகளை,
 மார்ச் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog