பள்ளி ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்., 9 முதல், 11 வரை நடக்கிறது.இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான, நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியிடப்பட்டன. 


இதன்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியல், தேர்வர்களின் மதிப்பெண், இனசுழற்சி மற்றும் இதர உள் ஒதுக்கீடுகள் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகளால், ஏப்., 1ல் வெளியிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஏப்., 9, 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், மாவட்டங்களில் தனித்தனியே நடத்தப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்கப்படும், அசல் ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். பின், எழுத்துத் தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில், 'மெரிட்' பட்டியல் தயார் செய்யப்பட்டு, கவுன்சிலிங் மூலம் பணி நியமனம் நடக்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இடைத்தேர்தல் காரணமாக, சென்னை மாவட்டத்தில் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog