ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்வி பட்டியல் சேகரிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும். அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது. ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா? என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, என கூறினர்.

Comments

Popular posts from this blog