புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க ஆர்வமான ஆசிரியர்களுக்கு அழைப்பு

புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ வல்லுனர்களை, பள்ளிக் கல்வித் துறை வரவேற்றுள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்றவும், 

பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை வடிவமைக்க, அனுபவமிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்களை குழுவில் ஈடுபடுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 

எனவே, ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் பெயர் விபரங்களை, www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் இன்று முதல், ஜூன், 23, மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog