டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா?



ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது. இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான ’ஹால்டிக்கெட்’ டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 


தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆக., 5 ல் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது. இதில் 70 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
அவர்கள் ஆக., 6 காலையில் தான் ஊர்களுக்கு திரும்புவர். 


இதனால் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சிரமம். போராட்டத்தை காரணம் காட்டி சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என, தெரிவித்துள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’தேர்வு நடத்துவது குறித்து டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசித்து வருகிறது. ஓரிரு நாட்களில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,’ என்றார்.

Comments

Popular posts from this blog