நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 48.47% மாணவ, மாணவிகள் தேர்ச்சி... அதிகபட்சமாக டெல்லியில் 74.92% தேர்ச்சி
டெல்லி: இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாலை 4 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் 2 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது.

நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீர் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.


இதில் தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Comments

Popular posts from this blog