டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Popular posts from this blog
எந்த அறிவிப்பும் இல்லாமல் முடிந்த சட்டப்பேரவை... தீவிர போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் தொடரில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகாததை அடுத்து தீவிர போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஊதியம் இல்லாத மே மாதம் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து ...
3,5,8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் Fail! - தேசிய கல்விக் கொள்கை அமல்! மத்திய அரசின் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற முறை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசின் CBSE பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அமலில் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் படி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் CBSE பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவர்கள் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதற்காக பெற்றோர்களிடமும் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டே இந்த நடைமுறையை அமல்படுத்த இருந்த நிலையில் சில வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் திருத்தப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புகள் சென்றுவிட்டதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment