5,575 மையங்களில் இன்று குரூப்-4 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 16.30 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் அதிகம் பேர் விண்ணப்பிக்கும் தேர்வு இதுவாகும். 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கைபேசி, மின்னணு சாதனங்கள், கைப்பை உள்ளிட்டவை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாது.

புத்தகம், லாக் புத்தகம், கால்குலேட்டர், துண்டுச் சீட்டு உள்ளிட்டவையும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாது.


மீறும் நபர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. வண்ணப் பேனாக்களையோ, பென்சில்களையோ பயன்படுத்தக்கூடாது என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்குள் இருத்தல் நலம்.

Comments

Popular posts from this blog