TNTET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி பி.எட். மற்றும் டி.எல்.எட். படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தகுதித்தேர்வு ஜூன் 8, 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 5.42 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 3.80 லட்சம் பேர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் பதவிக்கான இரண்டாம் தாளில் பங்கேற்றனர். மீதமுள்ளவர்கள் தான் முதல் தாள் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து ஆகஸ்டில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.யின் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்

Comments

Popular posts from this blog