உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!


உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோதல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோதல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தார்.

Comments

Popular posts from this blog