ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும்.

இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 24,05,145 பேர் எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CTET தேர்வில் (22.55%) 5,42,285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog