TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது.

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை என முறைகேடு நடந்த 2 தேர்வு மையத்திற்கு சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? முறைகேடு எப்படி நடைபெற்றது ? என்று பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் TNPSC அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான விஷயங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் ஆலோசனைக்குப் பிறகு முக்கியமான முடிவு எடுப்பதாக கருதப்படுகிறது.மேலும் குரூப் 4 தேர்வை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்தலாமா ? என்ற யோசனையும் அரசுக்கு இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கியமான முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog