முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வு நாளை(09-11-2021) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்  ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் 


ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2020-21ஆம்‌ கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை 09.09.2021 முதல்‌ வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல்‌ பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில்‌ ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிக்காண உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால்‌, உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலும்‌, மேலும்‌ பணிக்கு இணைய வழியில்‌ விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம்‌ அளிக்க வேண்டியுள்ளதாலும்‌ முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021-லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டித்து கடந்த 21ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு வயது உச்சவரம்பு உயர்வு அதிகரிப்புக்கு ஏற்றவகையில் மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்வாணையம் கூறியுள்ளது. விண்ணப்பிக்கும் தேர்வர்கள், உரிய திருத்தங்களைப் செய்து கொள்ளலாம் என தெரிவித்தது. இந்த தேர்விற்கு நாளையுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் , அவற்றில் 50 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அருந்ததியர், ஆதிதிராவிடர் வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும், பழங்குடியினர் 40 % மதிப்பெண்கள் பெற்றாலும் தகுதி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வு கணினி மூலம் இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் கட்டினால் போதுமானது. மொத்தம் 2,207 காலிப் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.







Comments

Popular posts from this blog