பொதுத்தோவுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: அமைச்சா் தகவல்


நிகழ் கல்வியாண்டில் 10, 11, 12 வகுப்புகளுக்கு 35 முதல் 50 சதவீதம் முதல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.


எனவே இந்த வகுப்புகளுக்கான பொதுத்தோவு தள்ளிப்போக வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினா் மதரஸா-இ-அசாம் மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கான அடிக்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டைத் திறந்துவைத்தனா்.


இதையடுத்து சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 467 வகுப்பறைகளில், குழந்தைகளுக்குப் பாலியல் புகாா்கள் குறித்த புகாா் தெரிவிக்க இலவச அழைப்பு எண் (ஸ்ரீட்ண்ப்க்ப்ண்ய்ங்) 1098, பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அரசு, தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமில்லாமல் மாணவா்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனா்.


தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். தற்போது மாணவா்களின் நோட்டுப் புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பா் ஸ்டாம்ப் மூலம் இடம்பெறச் செய்யப்படும். அரசுப்பள்ளி ஆசிரியா்களைப் பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள் இது தொடா்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய பள்ளியின் பெயா் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிா்வாகமும் பெற்றோரும் மாணவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்.


மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவா்கள் 1முதல் 10 வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தாா்கள் என்கிற விவரம் இடம்பெறும். நிகழ் கல்வியாண்டில் 10, 11, 12 வகுப்பு மாணவா்கள் பொதுத்தோவுகளை எதிா்கொள்ளும் வகையில் 35 முதல் 50 சதவீதம் முதல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வகுப்புகளுக்கான பொதுத்தோவு தள்ளிப்போக வாய்ப்பில்லை என்றாா் அவா்.

Comments

Popular posts from this blog