உத்தரபிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு... வாட்ஸ்ஆப்பில் வெளியான வினாத்தாள்



இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உத்தரபிரதேசத்தில் UPTET எனப்படும் மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி பெறுவார்கள். இந்த தேர்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள்கள் வாட்ஸ்ஆப்பில் வெளியாக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து உத்தரப்பிரதேச கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவிவேதி கூறியதாவது-


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்வை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதற்கு விண்ணப்பித்தவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கலாம். வினாத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படை அமைத்திருக்கிறோம். இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வினாத்தாள் லீக்கான விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, பாஜக அரசில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


Comments

Popular posts from this blog