2020-21 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் புதிய மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரம்.! பள்ளிக்கல்வித்துறை தகவல்


நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 6.73 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


கடந்த 2020-21 கல்வி ஆண்டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1,28,000 மாணவர்கள் கூடுதலாக, அரசுப் பள்ளியில் சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலை மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாகத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.


இதனால் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனோ பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சுமையினால் பல பெற்றோர் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.


அதன்படி, அரசுப் பள்ளிகளில் நடப்பு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 46,50,671 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 53,24,009 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6,73,338அதிகம் ஆகும். அந்த வகையில் 1-ம் வகுப்பில் மட்டும் நடப்புக் கல்வியாண்டில் 3,93,285 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 37,554 அரசு பள்ளிகளில் 53,24,009 மாணவர்கள் தற்பொழுது படித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog