4.5 லட்சம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை


தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.


மாவட்ட இணைச் செயலாளர் வினோத்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாநில பொதுச்செயலாளர் செல்வம் சிறப்புரை ஆற்றினர். இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்டத் தலைவராக கண்ணதாசன், மாவட்ட செயலாளராக பாண்டி, மாவட்ட பொருளாளராக மாரி, துணை நிர்வாகிகளாக மூவேந்தன், காளிதாஸ், மூகாம்பிகை, முத்துக்குமார், வினோத்ராஜா, ராமமூர்த்தி, செந்தில்வேல், முத்துராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கணினி இயக்குனர்கள், கல்வித்துறை பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் டிபிசி ஊழியர்கள், பொதுத்துறை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பணிநீக்க காலம் 41 மாதத்தை பணிக்காலமாக கருத வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, விடுப்பு சரண், ஜிபிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog