குரூப் 2, 2ஏ மற்றும் 4 தேர்வுகள் தள்ளிப்போகுமோ?


மத்திய, மாநில அரசு துறைகளில் பணியாளர் நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. யு.பி.எஸ்.சி., தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் மட்டுமே கொரோனா குறைந்தபோது நடத்தப்பட்டன.தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் கல்லுாரி மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளனர்.இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடித் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.


இந்தாண்டு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். தமிழ் பாடத்தில் தேர்வு, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்து வருகின்றனர்.ஆனால் அதிகரித்து வரும் கொரோனா இந்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா 3ம் அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு அமலாகியுள்ளது.


மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தால் இந்த ஆண்டும் அரசு வேலை கானல் நீராகிவிடுமோ என புலம்புகின்றனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் கடந்த ஆண்டில் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இதில் குறைவான தேர்வாளர்களே பங்கேற்றனர். ஆனால் குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகளில் பல லட்சம் பேர் பங்கேற்பர் என்பதால், அதனை நடத்துவது சிரமம். இத்தேர்வுகளுக்கு பஸ், ரயில் சேவை வசதி வேண்டும். இதனால் கொரோனா நேரத்தில் தேர்வு நடத்த அரசு தயங்குகிறது. பிப்ரவரியில் குரூப் 2, 2ஏ மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்தது இந்நிலையில் 2 வாரங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்தால்தான் தேர்வு சாத்தியம் என்ற நிலை உள்ளது.

Comments

Popular posts from this blog