12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் போளூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு




போளூர்: திருப்புதல் தேர்வு 12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு பொதுத்தேர்வு போல நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்வுக்கான கணிதப்பாட வினாத்தாள் மற்றும் 10ம் வகுப்பு அறிவியல் பாட வினாத்தாள் ஆகியவை சமூக வலைதளங்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக, தேர்வுத்துறை இணை இயக்குநர் விசாரித்துள்ளார். அதில், தேர்வுத்தாள் போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளியானது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், போளூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போளூர் போலீசார் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த தாளாளர் லீமாரோஸ், முதல்வர் கிரேசி, கணித ஆசிரியர் பிரசாத், அலுவலக பணியாளர் ஜெனிபர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog