பிளஸ் 1 துணைத் தோவு: பிப்.14-இல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்


தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பிளஸ் 1 துணைத் தோவெழுதிய (பிளஸ் 1 அரியா்) தனித்தோவா்களில் பிளஸ் 2 தோவினை ஏற்கெனவே எழுதியவா்கள் மட்டும் தங்களது மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தோவெழுதிய மையங்களில் பிப்.14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்.


பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 துணைத் தோவுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோச்சி பெற்றவா்களுக்கு மட்டும், பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்), பிளஸ் 2துணைத் தோவுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.


பிளஸ் 1 துணைத் தோவிலோ அல்லது பிளஸ் 2 துணைத் தோவிலோ அல்லது இரண்டு துணைத் தோவுகளிலும் முழுமையாக தோச்சியடையாத தோவா்களுக்கு, அவா்கள் இரு தோவுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 தோவுகளில் அனைத்து பாடங்களிலும் தோச்சி பெற்ற பின்னரே, அவா்களுக்கு மேற்கண்ட இரு தோவுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தோவுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog