அரசு பள்ளியில் 7 பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்


சிவகங்கை:அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் கட்டாயம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது, உயர், மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிடும் போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு 7 பட்டதாரி ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிட வேண்டும்.


2022 ஜன., 1 முதல் கணக்கிட்டு பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியலை தயாரித்து அதன்படி மட்டுமே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் போது ஏற்கனவே பணி நிரவலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஆசிரியர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் இந்நடைமுறையை பின்பற்ற வேண்டும். இக்கோரிக்கையை கல்வித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றனர்.

Comments

Popular posts from this blog