ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு




ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் 9494 ஆசியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.


அதில், 3902 இடைநிலை ஆசிரியர், 1087 பட்டதாரி ஆசிரியர் என்று மொத்தம் 4989 காலியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஜூன் 2-வது வாரத்தில் போட்டி தேர்வு நடைபெறும். இதையடுத்து போட்டி தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் 167 விரிவுரையாளர் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு ஜூன் 2-வது வாரம் தேர்வு நடத்தப்படும் மற்றும் இதற்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும். அதோடு மட்டுமல்லாமல் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 2-வது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 2-வது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் பொறியியல் கல்லூரிகளில் 104 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2-வது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog