முக்கிய அறிவிப்பு...இன்று முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - லிங்க் இதோ!





குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு இன்று (பிப்.23 ஆம் தேதி) முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை கீழ்க்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.


பிப்.23 ஆம் தேதி முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


"பிப்.23 ஆம் தேதி முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.மார்ச் 23 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள். இதனையடுத்து, குரூப் 2-இல் 116 காலிப் பணியிடங்களுக்கும் ,குரூப் 2A நிலையில் 5413 பணியிடங்களுக்கும் மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A போட்டித் தேர்வுகள் நடைபெறும்


குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.ஆனால்,மதியம் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.இந்த தேர்வுகளை இரண்டு வகையாக எழுதாலம்.அதன்படி, தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு 100 கேள்விகள் தமிழிலும்,பொது அறிவில் 75 கேள்விகளும்,ஆப்டிடியூட் அளவில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்படும்.


அதைப் போன்று,ஆங்கில மொழியில் எழுதுபவர்களுக்கு 100 கேள்விகள் ஆங்கில பாடத்திலும்,பொது அறிவில் 75 கேள்விகளும், ஆப்டிடியூட் அளவில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்படும்.குறிப்பாக,200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும்.குரூப்- 2, 2 ஏ தேர்வுகளில் 300க்கு 90 மதிப்பெண்களுக்கு கீழே பெற்றால் தேர்ச்சி இல்லை.இதனையடுத்து,தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்",என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில்,இன்று (பிப்.23 ஆம் தேதி) முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog