டி.ஆர்.பி., தேர்வு தேர்வர்கள் அதிருப்தி



கோவை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அவசரகதியில் நடத்தப்பட்டதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் கடந்த, 12ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.இந்நிலையில், மைய ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் பலர் தேர்வில் பங்கேற்கவில்லை என தேர்வர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, நகரின் மையப்பகுதிகளில் பல கல்லுாரிகள் இருந்தும், தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கியதால் அவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.பாண்டிச்சேரியை சேர்ந்த ரம்யா கூறுகையில், ''ஆங்கிலத்தேர்வை இரு தினங்களுக்கு முன்பு எழுதினேன். கோவில்பாளையம் பகுதியில் ஒரு கல்லுாரியில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அம்மையத்திற்கு வந்தவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். இங்கு, 87 பேருக்கு, 42 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது,'' என்றார்.தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், 'தேர்தல், திருப்புதல் தேர்வு, கலந்தாய்வு நடந்த சூழலில், டி.ஆர்.பி., தேர்வும் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. பெரும்பாலானவர்களுக்கு வேறு மாவட்டங்களில் மையங்கள் ஒதுக்கியதால், ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகம் என்பது உண்மை தான்,' என்றார்.


Comments

Popular posts from this blog