மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணியா..? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன் மொழிவை அனுப்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..


மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனை என்பது தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணியாளருக்கு பணி கொடுக்கப்படு.. அதிமுக ஆட்சிக்கு வரும் போது அவர்களின் பணி நீக்கப்படும்.. இதுவே தமிழகத்தில் இருந்து வரும் நடைமுறையாக உள்ளது.. அப்படி கடந்த முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள், மனு தாக்கல் செந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது..


இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன் மொழிவை அனுப்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.. மேலும் ஆய்வு செய்து அனுப்பப்பட்ட முன்மொழிவை தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த பரிசீலனை மீது உத்தரவு பிறப்பிக்க உள்ள திட்டமிட்டுள்ளது.. எனவே இதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதால் இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது..

Comments

Popular posts from this blog