காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.


தமிழக காவல்துறையில் காவலர்கள், உதவி ஆய்வாளர் போன்ற பணியார்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்தி வருகிறது.. எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவர் பரிசோதனை ஆகியவை மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்..


இந்த நிலையில் இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.. அதன்படி, காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.. இந்த தகுதி தேர்வு நடத்தப்பட்ட பிறகு தான் எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.. தமிழ்த்தகுதி தேர்வும், எழுத்துத்தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும், தமிழ் தகுதி தேர்வில் கட்டாயம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்துத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..


தமிழ்த் தகுதி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டு, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் காவலர் தகுதி தேர்வு எழுத முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதி தேர்வு மற்றும் காவலர் தேர்வு தலா 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்றும், உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், தமிழக இளைஞர்களை 100 சதவீத நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முறை மக்களால் நடத்தப்படும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப் பாடத்தாள் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Comments

Popular posts from this blog