ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கண்டித்து முதுகலை ஆசிரியர்கள் போராட்டம்




முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடைபெற்ற போட்டி எழுத்துத் தேர்வில் தங்களைக் கேட்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனம் செய்தது.


இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்குத் தங்களையும் கலந்தாலோசித்துப் பணி இடங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.


சென்னை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம் முன்பு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்று (பிப்ரவரி 25) போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் பொருளாளர் பிரபுதாஸ், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையாளர்களும் கணினி ஆசிரியர்களைத் தொழில்நுட்ப உதவியாளராகவும் பல்வேறு இடங்களுக்குப் பணி நியமனம் செய்தனர்.


அதிக தூரம் பணி நியமனம் செய்யப்பட்டதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைப் பார்க்காமல் தவித்துவருகிறார்.


மேலும் ஆசிரியர்களுக்கு பஞ்சப்படி, உழைப்பு ஊதியம் முயற்சி வழங்காமல் உள்ளனர். எனவே இதுபோன்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாட்டைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog