நிரந்தரப் பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.





தமிழக அரசு பணிகளில் பணிபுரிய தேவைப்படும் அதிகாரிகள் , அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் குரூப் 2 ,குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வருகிற மே மாதம் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் தொடங்கிவிட்டது. வருகிற 23-ஆம் தேதி வரை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளில் தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனிடையே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.



இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில், தனது ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு (Onetime Registration )மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும் இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in/ grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog