TN TRB முதுகலை ஆசிரியர்  தேர்வர்களுக்கு அதிர்ச்சி!.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!





தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) 6 தேர்வுகளை நடத்தி அதன் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.


அந்த வகையில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியானது.


இந்த தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பி.எட், எம்.எட் படித்த பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை உயிர் வேதியியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், நேற்று மதியம் உடற்கல்வி, விலங்கியல் பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது.


இந்த தேர்வு நேற்று நாமக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த 4 மையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் நடைபெற்றது. ஆனால் பலரும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலரும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததால் 7.30 மணிக்குள் தேர்வு எழுத செல்ல முடியவில்லை.


அதன்பிறகு சென்றதால் ஊழியர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கவில்லை. மேலும் தேர்வு மைய வளாகத்தில் 8 மணிக்கு பிறகு முன்பக்க கேட் மூடப்பட்டது. இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பழைய நடைமுறையை போலவே தங்களுடைய சொந்த மாவட்டங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog