TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. தேர்வாணைய தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்...!!!!





தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை.


தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அந்த அட்டவணையில் நடப்பு ஆண்டில் 32 வகை போட்டித் தேர்வுகளானது நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதையடுத்து பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இனிவரும் போட்டித் தேர்வுகள் காலை 9:30 மணிக்கு தொடங்கபடும். தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு தொகுத்தேர்வாக அமையும். இதில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி நிரந்தர கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் ஆகிய பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் 2022 பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதனை தொடர்ந்து குரூப் 2, 4 தேர்வு தொடர்பாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான தேதி மார்ச் மாதமும் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும். காலை தேர்வு 9:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறும். பிற்பகல் தேர்வு 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog