பிளஸ் 1க்கும் திருப்புதல் தேர்வு அறிவிப்பு


பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வை, அரசு தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை, இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


முதல்கட்டம் பிப்ரவரியில் முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்வு இந்த மாதம் துவங்க உள்ளது. ஆனால், பிளஸ் 1க்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 10ம் வகுப்பிலும் பொதுத் தேர்வு எழுதாமல், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். எனவே, அவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதன்படி, பிளஸ் 1 திருப்புதல் தேர்வு ஏப்., 5ல் துவங்க உள்ளது. ஏப்., 5, 6, 7, 8, 11, 12, 13ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. கீழே உள்ள லிங்க் click செய்யவும்


Click here 11th standard timetable

Comments

Popular posts from this blog