3 நாட்கள் நடந்த குரூப் 1 தேர்வு முடிந்தது 66 பதவிகளுக்கு 3,800 பேர் எழுதினர்: மே மாதம் ரிசல்ட் வெளியீடு



சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர் 18 இடம், போலீஸ் டிஎஸ்பி-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்-14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது.


சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 37 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. முதல் நாளான கடந்த 4ம் தேதி முதல் தாள் தேர்வு நடந்தது. 5ம் தேதி(நேற்று முன்தினம்) இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இறுதி நாளான நேற்று 3ம் தாள் தேர்வும் நடந்தது. 3 நாட்கள் நடந்த குரூப் 1 மெயின் தேர்வுகான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே மாதம் மத்தியில் ரிசல்ட்டை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog