புதுச்சேரியில் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு




பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வை பள்ளி அளவில் நடத்திட வேண்டும்.தேர்வு அட்டவணை விபரம்:10ம் வகுப்பு: வரும் 28ம் தேதி மொழிப்பாடம், 29ம் தேதி ஆங்கிலம், 30ம் தேதி கணிதம், 31ம் தேதி அறிவியல், 1ம் தேதி சமூக அறிவியல்.பிளஸ் 2: வரும் 28 ம் தேதி மொழிப்பாடம், 29ம் தேதி ஆங்கிலம், 30ம் தேதி கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளி கேஷன், மனையியல், அரசியல் அறிவியல், 31ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 1ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை பொறியியல் பிரிவுகள், 4ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண் அறிவியல், டெக்ஸ்டைல் டிசைனிங்.5ம் தேதி இயற்பியல்

Comments

Popular posts from this blog