10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

 



10,11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது


இதனை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மேற்கண்ட தேதிகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments

Popular posts from this blog