இன்று முதல் 10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை!




கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் பிப்ரவரி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மே 5ம் தேதி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வும், மே 9ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு , மே 6 முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான விண்ணப்பங்கள் இன்று மார்ச் 9 முதல் 15 வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.


அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் தக்கல் சிறப்பு அனுமதி திட்டம் மூலம் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ரூ500, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வர்கள் ரூ 1000மும் செலுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog