11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் ஏப்ரல் 5 தேதி முதல் நடக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. சென்ற வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இல்லாமல் திருப்புதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் அறிவித்துள்ளனர்.


பொதுத்தேர்வு தேதியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு ஜூன் 7 ம் தேதியும், பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 17ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்வுக்கான தேதியை அறிவித்த பின்னர் மாணவர்கள் பயத்துடன் படித்து வருகிற நிலையில், தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான திருப்புதல் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தான் திருப்புதல் தேர்வுகள் நடத்தப் பட்ட நிலையில், தற்போது பிளஸ் 1 மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த திருப்புதல் தேர்வு தேதி ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog